குளோபல் செல்லிங்

Amazon மூலம் உள்ளூரில் இருந்து உலக அளவில் விற்பனை செய்யுங்கள்

Amazon குளோபல் செல்லிங் மூலம் உலகளவில் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துங்கள், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கஸ்டமர்களை அடைந்திடுங்கள்
Amazon குளோபல் செல்லிங்- இந்தியப் புராடக்ட்டுகளை உலகளவில் எடுத்துச் செல்கிறது

Amazon குளோபல் செல்லிங் என்றால் என்ன?

Amazon குளோபல் செல்லிங் என்பது ஓர் ஈ-காமர்ஸ் ஏற்றுமதி புரோகிராம் ஆகும். இது இந்தியாவிலுள்ள உங்கள் வணிகத்தை உலகளவிலான சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. உலகெங்கிலும் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட Prime உறுப்பினர்கள் மற்றும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட கஸ்டமர்களுடன், 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 18 சர்வதேச மார்க்கெட்பிளேஸ்களில் Amazon இன் உலகளவிலான இருப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Amazon மூலம் ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும்?

உலகளாவிய வாடிக்கையாளர்கள்

200+

நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செல்லர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கி, மில்லியன் கணக்கான கஸ்டமர்களை அடையலாம்

வருவாய்த் திறன்

$3 பில்லியன்+

ஈ-காமர்ஸ் ஏற்றுமதி விற்பனைகளுடன், இந்தியத் தொழில்முனைவோர் ஏற்றுமதி செய்வதில் Amazon குளோபல் செல்லிங் உதவுகிறது.

வளர்ந்து வரும் சமூகம்

200 மில்லியன்

Amazon Prime உறுப்பினர்கள், உலகம் முழுவதும் உள்ளனர்.
Amazon ஏற்றுமதி வணிகம்- Amazon குளோபல் செல்லிங்கின் நன்மைகள்

உலகளவில் உங்கள் வணிகத்தை வளரச் செய்யலாம்

புதிய சர்வதேச கஸ்டமர்களை ஈர்க்க முடியும் எனும்போது, எதனால் இந்தியாவிற்குள் உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள்? Amazon குளோபல் செல்லிங் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான கஸ்டமர்களிடம் உங்கள் வணிகத்தை எடுத்துச் செல்லும்.
Amazon குளோபல் செல்லிங் - இந்தியா

ஆண்டு முழுவதும்
உங்கள் விற்பனையைப் பரவலாக்கலாம்

தீபாவளி மட்டுமல்ல, அதிகம் விற்பனையாகும் சர்வதேச சீசன்கள் மற்றும் Prime Day, கிறிஸ்துமஸ், பிளாக் ஃப்ரைடே, சைபர் மன்டே, ரம்ஜான் போன்ற பல சேல் காலங்களின்போது சிறந்த வருவாயைப் பெறலாம். உலகளவில் விற்க 30+ பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யலாம்.
Fulfillment by Amazon FBA

வணிகத்தை எளிதாக விரிவுபடுத்த Amazon
கருவிகளைப் பயன்படுத்தலாம்

Fulfillment by Amazon (FBA) மூலம் சர்வதேச லாஜிஸ்ட்டிக்ஸ், கஸ்டமர் சேவைகள், மேலும் பல சேவைகளில் Amazon உங்களுக்கு உதவும் இதனால் தாங்கள் தங்களின் தொழிலில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
இன்றே உங்கள் குளோபல் செல்லிங்கைத் தொடங்குங்கள்!

எங்கு ஏற்றுமதி செய்யலாம்?

வட அமெரிக்கா

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ
வட அமெரிக்காவில் விற்பனை செய்து, இந்தியா மற்றும் பிற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இடையே விரிவடைந்து வரும் வணிகத்தில் இருந்து சிறந்த பலனடையுங்கள்.

ஐரோப்பா

ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து
ஒரே அக்கவுண்ட்டின் மூலம், நீங்கள் Amazon இன் ஐரோப்பிய ஸ்டோர்களில் வாங்கக்கூடிய 8 வெவ்வேறு நாடுகளில் உள்ள கஸ்டமர்களை அடையலாம்.

ஆசிய-பசிபிக்

ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா
ஜப்பானில் விற்பனை செய்வதன் மூலம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருங்கள் அல்லது சிங்கப்பூர் அல்லது ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் கஸ்டமர் தளத்தில் இருந்து பலனடையுங்கள்.

மத்திய கிழக்கு

UAE மற்றும் சவுதி அரேபியா
இலவச மாதாந்திரச் சந்தா ஃபீயுடன், UAE மற்றும் சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்குச் சந்தைகளில் விற்பனையைத் தொடங்குங்கள்.

Amazon குளோபல் செல்லராக ஆவது எப்படி?

இந்தியாவில் இருந்து Amazon குளோபல் செல்லராதல்

1. எங்கு & என்ன விற்பனை செய்வது என்பதைத் தீர்மானித்தல்

உங்கள் ஏற்றுமதி வணிகத்துக்கான சந்தை வாய்ப்பைப் புரிந்துகொண்டு, நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் பொருத்தமான சர்வதேச மார்க்கெட்பிளேஸ்களைத் தேர்ந்தெடுங்கள்.
உலகளவில் Amazon இல் விற்பனை செய்தல்

2. பதிவு செய்து, உங்கள் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்தல்

Amazon குளோபல் செல்லராகப் பதிவு செய்து, Amazon இன் நவீன லாஜிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி மார்க்கெட்பிளேஸ்களில் உங்கள் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்யலாம், அவற்றை விரைவாகவும் எளிதாகவும் நிர்வகிக்கலாம்.
Amazon டெலிவரி

3. உங்கள் புராடக்ட்டுகளை டெலிவரி செய்தல்

உலகளவில் எப்படி டெலிவரி செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? உங்கள் புராடக்ட்டுகளை உலகின் எந்த இடத்திற்கும் ஷிப்பிங் செய்ய, Fulfillment by Amazon (FBA) சேவைகளை பயன்படுத்துங்கள். பிற ஷிப்பிங் முறைகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
Amazon குளோபல் செல்லிங் பேமெண்ட்

4. பேமெண்ட் பெறுதல் & வணிகத்தை வளர்த்தல்

விற்பனை முடிந்ததும் உங்கள் அக்கவுண்ட்டில் பணம் பெறலாம். Amazon இன் சர்வதேச கருவிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தி உங்கள் ஏற்றுமதி வணிகத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தலாம்.
வீடியோ: இந்திய குளோபல் செல்லர்களின் வெற்றிக் கதைகள்
Amazon இன் உலகளாவிய கட்டமைப்பைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டிற்குள் $10 பில்லியன் 'மேக் இன் இந்தியா' பொருட்களை ஏற்றுமதி செய்யவுள்ளோம்.
ஜெஃப் பெசோஸ்நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, Amazon Inc.
Amazon செல்லர் வழிகாட்டி சரிபார்ப்புப் பட்டியல்

குளோபல் செல்லிங் குறித்த அனைத்துத் தகவல்களும்

Amazon குளோபல் செல்லிங் குறித்தும், அதைப் பயன்படுத்தி உலகளவில் தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தியுள்ள இந்திய செல்லர்களின் ஆயிரக்கணக்கான கதைகளையும் பார்க்கலாம்
Fulfillment by Amazon FBA

எளிதாக்கப்பட்ட ஷிப்பிங்

நீங்கள் விற்பனை செய்கிறீர்கள், நாங்கள் ஷிப்பிங் செய்கிறோம். Fulfillment by Amazon (FBA) சேவைக்கு, நீங்கள் உங்கள் புராடக்ட்டுகளை Amazon இன் சர்வதேச ஃபுல்ஃபில்மெண்ட் மையங்களுக்கு ஷிப்பிங் செய்தல் போதும். உங்களின் சார்பாக உங்கள் புராடக்ட்டுகளை Amazon சேமித்து, பேக் செய்து, டெலிவரி செய்திடும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சர்வதேச அளவில் வீட்டுப் பொருட்களை விற்பதற்கான ஒழுங்குமுறைத் தேவைகள் யாவை?
Amazon குளோபல் செல்லிங் புரோகிராமானது ஈ-காமர்ஸ் மூலம் உலகளவிலுள்ள கஸ்டமர்களுக்கு இந்திய MSMEகள்/தொழில்முனைவோர்/ரீடெயிலர்கள் தங்களின் புராடக்ட்டுகளை விற்பனை செய்வதற்கான அணுகலை வழங்குகிறது.
Amazon குளோபல் செல்லிங் எப்படிச் செயல்படுகிறது?
Amazon Global Selling அமெரிக்கா (அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ & பிரேசில்), ஐரோப்பா (ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவீடன், நெதர்லாந்து, போலந்து, துருக்கி & இங்கிலாந்து), மத்திய கிழக்கு (UAE, சவுதி அரேபியா) & ஆசிய-பசிபிக் (ஜப்பான், சிங்கப்பூர் & ஆஸ்திரேலியா) 18 உலகளாவிய சந்தைகளில் விற்பனை செய்வதற்கான அணுகலை அளிக்கிறது.

இந்தப் புரோகிராம் மூலம், இந்திய MSMEகள்/ தொழில்முனைவோர்/ரீடெயிலர்கள் தங்களின் புராடக்ட்டுகளை லிஸ்டிங் செய்து, www.amazon.com, www.amazon.co.uk, www.amazon.de, www.amazon.ae போன்ற Amazon இன் சர்வதேச ஈ-காமர்ஸ் தளங்களில் விற்கலாம். இவை 200+ நாடுகளில் உள்ள கஸ்டமர்கள் தங்களின் புராடக்ட்டுகளைக் காட்சிப்படுத்த உதவுகின்றன. விற்பனையாளர்கள் இறக்குமதி ஏற்றுமதி வணிகத்தை உருவாக்கும் போது, Amazon தங்கள் தயாரிப்புகளை எளிதாக உலகளவில் எடுக்க உதவுகிறது.
Amazon சர்வதேச மார்க்கெட்பிளேஸ்களில் என்னென்ன புராடக்ட்டுகளை நான் விற்கலாம்?
இந்திய செல்லர்கள் விற்பனை செய்யும் முன்னணி புராடக்ட் வகைகள்

வீட்டுக்கான அத்தியாவசியப் பொருட்கள் (படுக்கை விரிப்பு, தலையணை உறை, திரைச்சீலைகள், மேலும் பல)
சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு (சுகாதாரம், தனிப்பட்ட பராமரிப்பு, வீட்டுப் பராமரிப்பு, கழிப்பறைப் பொருட்கள், மேலும் பல)
பியூட்டி பொருட்கள் (தனிப்பட்ட அலங்காரப் பொருட்கள், ஒப்பனை, மேலும் பல)
ஆடை (ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஃபேஷன்)
ஆஃபிஸ் புராடக்ட்டுகள் (ஆஃபிஸுக்கான அத்தியாவசியப் பொருட்கள், டயரி, நோட்டுப் புத்தகம், நாவல்டீஸ், மேலும் பல)

இந்திய விற்பனையாளர்களிடமிருந்து வேகமாக வளர்ந்து வரும் புராடக்ட் வகைகள்

மருத்துவக் கருவிகள் (வெப்பமானிகள், இரத்த அழுத்த மானிட்டர், மேலும் பல)
அறிவியல் கருவிகள் (ஆய்வகக் கருவிகள், கால்குலேட்டர், ஆய்வகததுக்கான அத்தியாவசியப் பொருட்கள், மேலும் பல)
பொம்மைகள் & விளையாட்டுகள் (குழந்தைகள் பொம்மைகள், கற்றல்/ஆக்டிவிட்டி பாக்ஸ்கள், ரோபோ பொம்மைகள், மேலும் பல)
கைவினைப்பொருட்கள் (தஞ்சாவூர் பொம்மைகள், ஓவியங்கள், சன்னபாட்னா பொம்மைகள், மேலும் பல)
ஆயுர்வேதம் (தனிப்பட்ட பராமரிப்பு, ஹெல்த் சப்ளிமென்ட்கள், மேலும் பல)
ஒரு Amazon செல்லராகப் பதிவு செய்ய எனக்கு என்ன தேவை?
Amazon சர்வதேச மார்க்கெட்பிளேஸ்களில் செல்லராகப் பதிவு செய்வதற்கு உங்களுக்குத் தேவையானவை:
 • மின்னஞ்சல் முகவரி & மொபைல் எண்
 • செல்லுபடியாகும் வணிக முகவரி
 • கிரெடிட் கார்டு மற்றும் நிறுவன/தனிப்பட்ட பேங்க் ஸ்டேட்மெண்ட்
 • தேசிய அடையாளச் சான்று
மேலேயுள்ள ஆவணங்களுடன் கூடுதலாக, ஐரோப்பா & மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனை செய்வதற்கு உங்களிடம் VAT ஆவணம் இருக்க வேண்டும். ஆவணத் தேவைகளை பூர்த்திசெய்ய உங்களுக்கு உதவக்கூடிய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் பட்டியல் Amazon இடம் உள்ளது.
சர்வதேச அளவில் நான் எப்படி விற்கலாம்?
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்
 • நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
 • நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் மார்க்கெட்பிளேஸைத் தேர்ந்தெடுக்கவும்
 • Amazon குளோபல் செல்லிங் மூலம் பதிவு செய்து, உங்கள் புராடக்ட்டுகளைக் காட்சிப்படுத்தவும்
 • Amazon Solution Provider Network partner மூலம் Amazon ஃபுல்ஃபில்மெண்ட் மையங்களுக்கு உங்கள் புராடக்ட்டுகளை ஷிப்பிங் செய்யவும்
பின்வருவனவற்றில் Amazon உங்களுக்கு உதவிடும்:
 • நவீன ஃபுல்ஃபில்மெண்ட் மையங்களில் உங்கள் புராடக்ட்டுகளைச் சேமித்தல்
 • உங்கள் புராடக்டைத் தேடும் உலகெங்கிலும் உள்ள கஸ்டமர்களுக்கு அதைக் காட்சிப்படுத்துதல்
 • கஸ்டமர் ஆர்டர் செய்த புராடக்ட்டை, ஆர்டரைப் பெற்ற 2 நாட்களுக்குள் பேக்கிங் செய்து ஷிப்பிங் செய்தல்
 • செல்லரின் பேங்க் அக்கவுண்ட்டில் இந்திய ரூபாய் மதிப்பில் அல்லது அவர்களின் விருப்பத்திற்கேற்ப சர்வதேச நாணய மதிப்பில் பேமெண்ட்டுகள் செய்யப்படும்.
கவனத்திற்கு: அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விற்பனை செய்வதற்கு Amazon இல் பதிவு செய்ய (தொழில்முறை செல்லிங் திட்டம்), சந்தா ஃபீயாக USD 39.99 (US), EUR 25 (EU), JPY 4,900 மற்றும் AUD 49.95 (AU) விதிக்கப்படும். அதற்கு, நீங்கள் செல்லுபடியாகும் சர்வதேச கிரெடிட் கார்டை வழங்க வேண்டியிருக்கும்.
என்னிடம் Amazon இந்தியா செல்லர் அக்கவுண்ட் இல்லை, இருந்தாலும் Amazon மார்க்கெட்பிளேஸ்களில் என்னால் விற்பனை செய்ய முடியுமா?
ஆம், உலகளவில் விற்பதற்கு உங்களிடம் Amazon இந்தியா செல்லர் அக்கவுண்ட் இருக்க வேண்டியதில்லை. உங்கள் புராடக்ட்டுகளை விற்பனை செய்ய விரும்பும் Amazon மார்க்கெட்பிளேஸில் ஒரு செல்லர் கணக்கை உருவாக்கினால் போதும்.
நான் ஏற்கனவே Amazon.in இல் விற்பனை செய்கிறேன் மற்றும் என்னிடம் Seller Central அக்கவுண்ட் உள்ளது, Amazon இல் நான் எவ்வாறு உலகளவில் விற்க முடியும்?
நீங்கள் ஏற்கனவே Amazon.in இல் விற்கிறீர்கள் என்றால், நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் நாட்டைத் தீர்மானித்து, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எளிதான வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
பேமெண்ட்டுகளை Amazon எவ்வாறு வழங்கும்?
உங்களுக்கு விருப்பமான பேங்க் அக்கவுண்ட் மற்றும் கரன்சியில் (INR, USD, GBP, EUR, YEN, AED போன்றவை) பேமெண்ட் கிரெடிட் செய்யப்படுவதை Amazon உறுதிசெய்திடும்.

இப்போது சர்வதேச அளவில் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்திடுங்கள்!

உலகளவில் விற்பனை செய்யும் ஆயிரக்கணக்கான இந்திய செல்லர்களின் குடும்பத்தில் இணையுங்கள்
Amazon Global Selling இல் பின்பற்றவும்