AMAZON EASY-SHIP

மன அழுத்தம் இல்லாத டெலிவரி

டெலிவரியின் போது பணம் செலுத்துதல் விருப்பங்களின் மூலம், இந்தியாவின் சர்வீஸ் வழங்கக்கூடிய பின் கோடுகளில் 99% க்கும் அதிகமாக டெலிவரி செய்கிறோம்
Amazon Easy Ship
டெலிவரிக்காக உறுதியளிக்கப்பட்ட நேரத்தின்போது அல்லது அதற்கு முன் கஸ்டமரிடம் மிகச்சிறந்த நிலையில் ப்ராடக்ட்டை டெலிவரி செய்யும் பொறுப்பை Amazon ஏற்றுக்கொள்கிறது.
விநாயக்Todu Price

Amazon Easy-Ship என்றால் என்ன?

Amazon Easy Ship என்பது Amazon.in செல்லர்களுக்கான ஒரு டெலிவரி சர்வீஸ் ஆகும். நீங்கள் Amazon Easy Ship ஐத் தேர்வுசெய்யும்போது, எங்கள் Amazon லாஜிஸ்டிக்ஸ் டெலிவரி அசோசியேட் மூலம் உங்களுடைய இடத்திலிருந்து உங்கள் ஆர்டர்கள் பிக்-அப் செய்யப்பட்டு, வாங்குபவர்களின் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படுகின்றன, இதற்கு உங்களுடைய குறைந்த அளவு உழைப்பே தேவைப்படுகிறது.

Easy Ship உங்கள் கஸ்டமர்கள் தங்கள் ஆர்டர்களையும் டெலிவரி தேதியையும் டிராக் செய்யவும் அனுமதிக்கிறது. Easy Ship மூலம் (கேஷ் ஆன் டெலிவரி எனவும் அழைக்கப்படும்) டெலிவரியின்போது பணம் செலுத்துதலைப் பயன்படுத்தி, டெலிவரி நேரத்தில் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தையும் வாங்குபவர்கள் பெறுகின்றனர். ஆர்டர்களுக்கான நிதி உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.
இதற்கு ஏற்றது: நீங்கள் உங்கள் சொந்தக் கிடங்கில் மற்றும் நெருக்கடியான மாரிஜின்களுடன் அதிக அளவிலான ப்ராடக்ட்டுகள் விற்பனை செய்தால் மற்றும் Amazon இடம் டெலிவரி வேலையை விட்டுவிட விரும்பினால் Easy-Ship பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

Amazon Easy-Ship எப்படி வேலை செய்கிறது?

Amazon Easy-Ship உங்கள் டெலிவரி பொறுப்புகளை அகற்ற மற்றும் உங்கள் பிசினஸை அதிகரிக்க உதவலாம்.

படி 1

செல்லராகப் பதிவு செய்து, உங்கள் புராடக்ட்டுகளைப் பட்டியலிடுங்கள்
ஓர் Amazon.in செல்லராகப் பதிவுசெய்து, Seller Central இல் உள்நுழைந்து உங்கள் அக்கவுண்ட்டை அமைக்கவும். Seller Central இல் உள்ள எங்கள் பயன்படுத்துவதற்கு எளிதான லிஸ்டிங் டூல்கள் அல்லது செல்லர் ஆப் மூலம் உங்கள் பிசினஸ் விவரங்களைப் புதுப்பித்து உங்கள் ப்ராடக்ட் லிஸ்டிங்குகளைச் சேர்க்கவும்.

படி 2

உங்கள் ப்ராடக்ட்டுகளை உங்கள் கிடங்கில் ஸ்டோர் செய்து, பிக்-அப்களுக்காக Amazon க்கு முகவரியை வழங்கவும்
நீங்கள் உங்கள் ப்ராடக்ட்டுகளைப் பட்டியலிட்ட பிறகு, உங்கள் கிடங்கில் உங்கள் ப்ராடக்ட்டுகளை ஸ்டோர் செய்யவும். எங்கள் Amazon லாஜிஸ்டிக்ஸ் டெலிவரி அசோசியேட் மூலம் எளிதான பிக்-அப்களைச் செய்வதற்காக உங்கள் Seller Central Easy Ship அமைப்புகளில் நீங்கள் உங்கள் கிடங்கின் முகவரியை வழங்கலாம்.

படி 3

உங்கள் ப்ராடக்ட்டுகளுக்கான ஆர்டர்களைப் பெறுங்கள்
Amazon.in இல் உங்களிடம் கஸ்டமர்கள் ஆர்டர் செய்யும்போது, நீங்கள் மின்னஞ்சல், Seller Central, SMS ஆகியவற்றின் மூலம் ஆர்டரின் அறிவிப்பைப் பெறுவீர்கள். அதன்பிறகு நீங்கள் பிக்-அப்பைத் திட்டமிடலாம் மற்றும் Amazon கைடுலைன்களுக்கு இணங்க ப்ராடக்ட்டைப் பேக் செய்து, பிக்-அப்பிற்குத் தயாராக வைத்திருக்கலாம். நீங்கள் Amazon பேக்கேஜிங் பொருளைப் பயன்படுத்தலாம்.

படி 4

Amazon உங்கள் ப்ராடக்ட்டுகளைக் கஸ்டமர்களுக்கு டெலிவரி செய்கிறது
இந்தியாவின் பின் கோடுகளில் 99% வரை டெலிவரி செய்யும் நமது உலகத்தரம் வாய்ந்த ஃபுல்ஃபில்மெண்ட் நெட்வொர்க் மூலம், உங்கள் ப்ராடக்ட்டுகளைக் கஸ்டமருக்கு விரைவாகவும் நம்பத்தகுந்த வகையிலும் வழங்குவோம். உங்கள் கஸ்டமர்கள் தங்கள் ஆர்டர்களை டிராக்கிங்கும் செய்யலாம். மகிழ்ச்சியான கஸ்டமர்கள் என்றால் 5 நட்சத்திர மதிப்பீடு மற்றும் கூடுதல் ஆர்டர்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அர்த்தம்.
நாங்கள் வழக்கமாக Amazon Easy Ship, அது எவ்வாறு வேலைசெய்கிறது மற்றும் உங்களுக்கான சரியான டெலிவரி முறையைத் தேர்ந்தெடுத்தல் பற்றி இலவச வெபினார்கள் நடத்துகிறோம்
தொடங்குவதற்கு உதவி வேண்டுமா?
Easy-Ship க்கு மாறியதன் மூலம், உங்கள் சிக்கல்கள் அனைத்தும் கவனித்துக்கொள்ளப்பட்டது மற்றும் ட்ராக்கிங்கும் அற்புதமாக இருந்தது. நாங்கள் இதற்கு முன்பு இல்லாத கேஷ் ஆன் டெலிவரியையும் தொடங்கியுள்ளோம்.
யோகேஷ் வாத்வாDMP Carrycases
இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லையா?

Amazon Easy-Ship நன்மைகள்

Easy-Ship நன்மைகள் - மன அழுத்தம் இல்லாத ஷிப்பிங்
மன அழுத்தம் இல்லாத ஷிப்பிங்
Amazon Easy-Ship ஐத் தேர்வுசெய்வதன் மூலம், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் சௌகரியத்தில் உங்கள் ப்ராடக்ட்டுகளை நீங்கள் ஷிப்பிங் செய்யலாம்.
Easy-Ship நன்மைகள் - உங்கள் முகவரியிலிருந்து பிக்-அப்
உங்கள் முகவரியிலிருந்து பிக்-அப்
Amazon Easy-Ship மூலம், நாங்கள் உங்கள் பிக்-அப் முகவரியிலிருந்து ஷிப்மெண்ட்டை பிக்-அப் செய்வதற்கான சௌகரியத்தை வழங்குகிறோம்.
Easy-Ship நன்மைகள் - தனிப்பயன் பேக்கேஜிங்
விருப்ப பேக்கேஜிங்
Amazon பேக்கிங் பொருட்களை உங்கள் ப்ராடக்ட்டைச் சுற்றுவதற்காக நீங்கள் வாங்கலாம் அல்லது உங்கள் சொந்தப் பேக்கிங் பொருட்களையும் பயன்படுத்தலாம்.
Easy-Ship நன்மைகள் - டெலிவரியின்போது பணம் செலுத்துதல்
கேஷ் ஆன் டெலிவரி பேமெண்ட்டுகள்:
இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் (கேஷ் ஆன் டெலிவரி எனவும் அழைக்கப்படும்) டெலிவரியின் போது பணம் செலுத்துதல் மூலம் உங்கள் Easy Ship ஆர்டர்கள் செயல்படுத்தப்படும். தொகை உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
மேலும் தேடுகிறீர்களா? நாங்கள் டெலிவரியுடன் பேக்கிங் & ஸ்டாரேஜையும் பார்த்துக்கொள்ளலாம்

இன்று உங்கள் ஆன்லைன் செல்லிங் பயணத்தை தொடங்குங்கள்

மன அழுத்தம் இல்லாத டெலிவரி விருப்பங்களின் மூலம், Amazon.in இல் ஷாப்பிங் செய்யும் கோடிக்கணக்கான கஸ்டமர்களுக்கு உங்கள் புராடக்ட்டுகளைக் கிடைக்கச் செய்யுங்கள்.